டப்பிங்கை தொடங்கிய விஷால்.. விறுவிறுப்பாகும் ‘மார்க் ஆண்டனி‘

‘மார்க் ஆண்டனி’ படத்தின் டப்பிங்கை நடிகர் விஷால் தொடங்கியுள்ளார்.
ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் மார்க் ‘ஆண்டனி’. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். முதல் முறையாக டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது ‘மார்க் ஆண்டனி’. ப்ரீயட் படமாக உருவாகியுள்ள இந்த படம் இரண்டு காலக்கட்டங்களில் உருவாகியுள்ளது. அதாவது 1970-களில் நடப்பது போன்றும், 1990-களில் நடப்பது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் சில காரணங்களால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விஷால் தொடங்கியுள்ளார். தனது பகுதி டப்பிங்கை அவர் கொடுத்து வரும் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Here's a glimpse from #Vishal dubbing for #MarkAntony
— Only Kollywood (@OnlyKollywood) July 9, 2023
A @gvprakash Musical
Mark Antony in cinemas worldwide this Vinayagar Chathurti @VishalKOfficial @iam_SJSuryah @vinod_offl @Adhikravi @riturv @selvaraghavan @suneeltollywood@ministudiosllppic.twitter.com/J1tRHKJo6a