இளம் பெண்ணுடன் நடிகர் 'விஷால்'.......-வைரல் வீடியோ!

photo

நடிகர் விஷால் இளம் பெண் ஒருவருடன் நியூயார்க் நகரில் வலம் வரும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.


உதவி இயக்குநராக சினிமாவுக்குள் நுழைந்து இன்று கோலிவுட்டில் சூப்பர் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் விஷால். சண்டகோழி, திமிரு, சத்யன், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. விஷால் சினிமாவை கடந்து பொது வாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இந்த நிலையில் நியூயார்க் நகரில் நடிகர் விஷால் இளம் பெண் ஒருவருடன் வலம் வருகிறார். அப்போது ஒருவர் வீடியோ எடுக்கிறார். அதை பார்த்ததும் விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அது விஷாலின் காதலியா? முதலில் அது விஷால் தானா? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Share this story