நடிகை லட்சுமி மேனனை நான் திருமணம் செய்கிறேனா ?... வதந்திகளுக்கு நடிகர் விஷால் காட்டமாக பதில் !

vishal

நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்யவுள்ளதாக வெளியான வதந்திகளுக்கு நடிகர் விஷால் காட்டமாக பதில் அளித்துள்ளார். 

இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பொதுவாக என்னைப் பற்றி வரும் எந்த போலிச் செய்திக்கும், வதந்திக்கும் நான் பதிலளிப்பதில்லை. அது பயனில்லாத ஒன்றாக கருதி வருகிறேன். ஆனால் சமீபத்தில் நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் என்ற செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வருகிறார். இதை நான் உறுதியாக மறுக்கிறேன். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, ஆதாரமற்றது. 

vishal

இந்த விளக்கத்திற்கு முக்கிய காரணம் ஒரு பெண் நடிகை சம்பந்தப்பட்டது தான். வதந்தியை பரப்புகிறவர்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை கெடுக்கிறார்கள். அவருடைய இமேஜை கெடுக்கிறார்கள். ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை சொல்லும் நீங்கள் பெர்முடா முக்கோணம் இல்லை. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். Share this story