மிக்ஜாம்: நிவாரண பணிக்காக ரூ.10 லட்சம் கொடுத்த நடிகர் 'விஷ்ணு விஷால்'.

photo

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் படிப்படியாக சீராகி வரும் நிலையில் தொடர்ந்து நிவாரண உதவிகள் பல்வேறு தரப்பிலிருந்து அரசு பொது நிவாரண நிதிக்கும், நேரடியாக மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிரது.இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ரூ. 10 லட்சத்தை நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “மிக்ஜாம் புயல் - கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக  ‘முதலமைச்சரின்  பொது நிவாரண நிதி-க்கு திரைப்பட நடிகர் - சகோதரர் விஷ்ணு விஷால், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.” என பதிவிட்டுள்ளார்.

Share this story