பான் இந்தியா நடிகராக மாறும் பிரபல காமெடி ஜாம்பவான்... வியப்பில் ரசிகர்கள் !

yogibabu

பிரபல காமெடி நடிகரான யோகிபாபு அடுத்தடுத்து பான் இந்தியா திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்துள்ளவர் நடிகர் யோகிபாபு. சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு கைக்கொடுக்க ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். 

yogibabu

தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் யோகிபாபு, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறார். அதனால் அவர் நடிக்காத படமே இருக்காது என்ற நிலை உள்ளது. குறுகிய காலத்திலேயே 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் மட்டுமே நடித்து வந்த யோகிபாபு, அட்லி இயக்கத்தில் உருவாகும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகவுள்ளார். இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படத்திலும் யோகிபாபு நடித்து வருகிறார். முன்னணி பாலிவுட் இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து பான் இந்தியா திரைப்படங்களில் யோகிபாபு ஒப்பந்தமாகி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story