யோகிபாபு படத்திற்கு அஜித் பெயர்.. வியப்பில் ரசிகர்கள் !

yogibabu

யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தற்போது டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே யோகிபாபுவின் 'ட்ரிப்' படத்தை இயக்கியவர். இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. 

yogibabu

 இந்த படத்தில் யோகிபாபுக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். இவர்களுடன் மகேஷ் சுப்ரமணியம், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன், செண்ட் ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.எஸ்.மனோஜ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மா இசையமைத்து வருகிறார். 

ஓபன் கேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'தூக்குத்துரை'  என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  'விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பிரபலமான பெயரான தூக்குத்துரை என்ற என்பதை தான் இப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story