மாறுப்பட்ட தோற்றத்தில் யோகிபாபு... பிறந்தநாளையொட்டி ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

யோகிபாபு பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘வானவன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. தற்போது அவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து அவர், மற்றொரு புறம் வித்தியாசமான கதைக்களங்களில் உருவாகும் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் தூக்குத்துரை, ஃபோட் உள்ளிட்ட படங்களிலும், தலைப்பு வைக்காத படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகிபாபு தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி யோகிபாபுவின் அந்த படத்திற்கு ‘வானவன்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வித்தியாசமான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை சஜின் கே சுரேந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் யோகிபாபுடன் இணைந்து ரமேஷ் திலக், லஷ்மி பிரியா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.