எந்த தீண்டாமையையும் நடக்கவில்லை.. வதந்திகளை பரப்பவேண்டாம் - நடிகர் யோகிபாபு விளக்கம் !

siruvapuri

 எனக்கு எந்த தீண்டாமையும் நடக்கவில்லை என்று நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். 

நீண்ட நாட்களாக சினிமாவில் இருக்கும் நடிகர் யோகிபாபு, மிகவும் கஷ்டப்பட்டு நல்ல நிலைமைக்கு வந்துள்ளார். தமிழை, தவிர மலையாளம், இந்தியிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விரைவில் வெளியாகவுள்ள ஜவான், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ypgibabu

தீவிர முருக பக்தரான யோகிபாபு, திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட புகழ்பெற்ற கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருகிறார். அதேபோன்று சென்னை அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு அவர் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் யோகிபாபு, சிறுவாபுரி கோயிலுக்கு சென்ற வீடியோ ஒன்று வெளியானது. அதில் யோகிபாபுவிடம் சாதி பாகுபாடு பார்த்ததாகவும், தீண்டாமை கொடுக்க நடந்ததாகவும் தகவல் பரவியது.  

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் யோகிபாபு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் 12 ஆண்டுகளாக சிறுவாபுரி கோயிலுக்கு சென்று வருகிறேன். நீண்ட நாட்களாக அந்த அர்ச்சகரை எனக்கும் தெரியும். வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். அது பழைய வீடியோ. சாதியை பார்க்கவேண்டாம். அர்ச்சகரால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

 

Share this story