டைரக்டர் பாரதிராஜாவுக்கு பாராட்டு விழா -யார் நடத்துகிறார் தெரியுமா ?

bharathiraja
இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார் .இவர் இயக்கிய பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியுள்ளது .இந்நிலையில் அவரை பாராட்டி பல்வேறு இயக்குனர் மற்றும் நடிகர்கள் பேசியுள்ளனர். 
இயக்குனரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறனின் பன்னாட்டு திரைப்பட மற்றும் கலாச்சார நிறுவனமும், வேல்ஸ் பல்கலைக்கழக காட்சி தகவலியல் துறையும் இணைந்து, பாரதிராஜாவின் சாதனைகளை பாராட்டி கவுரவிக்கும் விதமாக நடத்தும் நிகழ்ச்சிக்கு ‘தமிழ் பேசிய சினிமாவை தமிழ் சினிமாவாக மாற்றிய பாரதிராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாரதிராஜாவின் படங்கள் திரையிடப்படுகிறது.
அதை தொடர்ந்து படத்தை பற்றிய விவாதங்களும், உரையாடலும் நடக்கிறது.  11ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’, ‘கிழேக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘கிழக்குச்சீமையிலே...’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. நிகழ்ச்சியில் வெற்றிமாறன், ஆர்.கே.செல்வமணி, சேரன், அமீர், சத்யராஜ், ரேகா உள்பட பலர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

Share this story