"சத்யராஜ் முதல் ரஜினி வரை" -கோடிகளில் புரளும் கூலியில் நடிக்கும் நடிகர்கள்

Koolie
ரஜினி நடிக்கும் கூலி திரைப்படம் வசூலில் வரலாற்று சாதனை புரிய உள்ளது .அந்தளவுக்கு இப்படத்தை பார்க்க ரசிகர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர் .தமிழகம் மட்டுமின்றி கேரளா ,ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் கூட முன்பதிவில் கூலி சாதனை புரிந்து வருகிறது .இப்படத்தில் நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது .
கூலி திரைப்படத்தில் சைமன் என்கிற கேரக்டரில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இதில் சில நிமிட கேமியோ ரோலில் தாஹா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நடிகர் அமீர்கான் எந்தவித சம்பளமும் வாங்காமல் நடித்திருக்கிறார். ரஜினிக்காக இப்படத்தில் நடித்ததாக அமீர்கானே ஆடியோ லாஞ்சில் கூறி இருக்கிறார். இதில் காளீசா என்கிற கேரக்டரில் நடித்துள்ள உபேந்திராவுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.
கூலி படத்தில் தேவா என்கிற கேரக்டரில் நடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரூ.150 கோடி சம்பளம் மட்டுமின்றி படத்தின் லாபத்தில் இருந்து பங்கும் பெற இருக்கிறார். அதன் வாயிலாகவும் ரஜினிக்கு 100 கோடிக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் இப்படத்தில் தயாள் என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் மலையாள நடிகர் செளபின் சாஹிருக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பனாக நடித்துள்ள நடிகர் சத்யராஜுக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story