த.வெ.க. தலைவர் விஜய்க்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரெஜினா வாழ்த்து

vijay
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய்க்கு பல்வேறு திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரெஜினா, "விஜய் வெற்றிகரகமான நடிகர். வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் வருவார்" என்று அரசியல்வாதியாக களமிறங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.


 

Share this story