'தளபதி 68' அப்டேட் தெறிக்கும்.. - 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி.

photo

தளபதி விஜய் நடித்துள்ள அவரது 67வது திரைப்படமான ‘லியோ’  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. அடுத்ததாக தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டு ‘பகவதி’ திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஜெய். அந்த படத்தில் இருவரது நடிப்பும் அண்ணன் தம்பி உறவும் பலரையும் கவர்ந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த காம்போ இணையப்போவது படத்தின் மீதான எதிர்பார்பை மேலும் அதிகரித்துள்ளது.  எனினும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் தகவலுக்காகவும்  படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் காத்துள்ளனர்.

photo

அதுமட்டுமல்லாமல் “தளபதி 68 அப்டேட் சும்மா தெரிக்கும்!!! காத்திருங்கள்” என வெங்கட் பிரபு ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

Share this story