பாசமிகு தாயான நடிகை நயன்தாரா... லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள் !

nayanthara

 தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ளார். 

கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த அவர், கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை  பெற்றுக்கொண்டனர். 

nayanthara

தனது குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் வைத்தனர். குழந்தை பெற்றப்பிறகும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  நடிகையாக இருப்பதற்கு திருமணம் மற்றும் குழந்தைகள் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறார். தனது மகன்களை கவனித்துக் கொண்டு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நயன்தாரா வெளியிட்டுள்ளார். பிசியான நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது பாசமிகு தாயான மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

Share this story