பாக்சிங் செய்ய தயாரான ஐஸ்வர்யா மேனன்... வைரல் புகைப்படங்கள் !
குத்துச்சண்டை பயிற்சி எடுக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் தோன்றினார்.
பின்னர் 'தமிழ் படம் 2' படத்தில் சிவாவுடன் நடித்து மிகவும் பிரபலமானார். இதையடுத்து 'நான் சிரித்தால்', வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் ரவி தேஜாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சில படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், தொடர்ந்து கிளாமர் மற்றும் உடற்பயிற்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் பாக்சிங் செய்யும் புதிய புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.