கண்களால் கைது செய்யும் அழகியே... துஷாரா விஜயனின் சாரி லுக் புகைப்படங்கள் !

DusharaVijayan

நடிகை துஷாரா விஜயனின் மயக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

DusharaVijayan

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் துஷாரா விஜயன். பேஷன் டிசைன், மாடலிங்கில் ஆகியவற்றில் உள்ள ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்தார். கடந்த 2019-ஆம் வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதில் இவரின் மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அந்த கதாபாத்திரம் மறக்கமுடியாத கதாபாத்திரமாக இன்றைக்கும் இருக்கிறது.

DusharaVijayan

இந்த படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அநீதி’ படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.‌ இதையடுத்து மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் நடித்தார். இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. விரைவில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தில் நடிக்கவிருக்கிறார். 

DusharaVijayan

இந்நிலையில் மாடர்ன் பெண்ணான துஷாரா விஜயன், புடவையில் அழகான லுக்கில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

DusharaVijayan

Share this story