காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஹன்சிகா.. வைரலாகும் புகைப்படங்கள் !

hansika

சென்னையில் உள்ள காளிகாம்மாள் கோவிலில் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம் செய்தார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஹன்சிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகை ஹன்சிகா நடித்து வருகிறார். 

hansika

ஹாரர் காமெடி த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்தில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 

hansika

இந்நிலையில் இந்த படப்பிடிப்பிற்கு நடுவே நடிகை ஹன்சிகா, சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்மாள் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வின் போது ஹன்சிகாவுடன் இயக்குனர் ஆர்.கண்ணனும் இருந்தார். இதற்கிடையே நடிகை ஹன்சிகாவிற்கு அடுத்த பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

hansika

 

Share this story