காதலரை பிரிந்தாரா அஜித் பட நாயகி ?... தீயாய் பரவும் தகவல் !

Huma Qureshi

 தனது நீண்ட நாள் காதலரை அஜித் பட ஒருவர் பிரிந்ததாக தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. 

பாலிவுட்டில்  பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஹுமா குரோஷி. விளம்பர மாடலாக இருந்த அவர், அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘கெங்ஸ் ஒப்பி வசுசேய்புர’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். 

Huma Qureshi

தமிழில் முதல்முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோன்று அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களில் ஹுமா குரோஷி நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது பாலிவுட்டில் டபுள் எக்ஸ் எல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடாசர் அசிஸ் என்பவருடன் இணைந்து நடிகை ஹுமா குரோஷியே தயாரித்து வருகிறார். இந்நிலையில் முடாசர் அசிசை கடந்த 3 ஆண்டுகளாக ஹுமா குரோஷி காதலித்து வந்தார். தற்போது இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Share this story