மாடர்ன் லுக்கில் நிதி அகர்வால்... லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள் !

NidhhiAgerwal

மாடர்ன் லுக்கில் இருக்கும் அழகான புகைப்படங்களை நடிகை நிதி அகர்வால் வெளியிட்டுள்ளார். 

NidhhiAgerwal

பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நிதி அகர்வால். ஐதராபாத்தை சேர்ந்த அவர், மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த மூலம் தான் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். ‘முன்னா மைக்கேல்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் முதல்முறையாக அறிமுகமானார். 

NidhhiAgerwal

தமிழ், கன்னடம்,  மலையாளம், தெலுங்கு, இந்தி என  பல மொழிகளில் இவரது திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு  சிம்புடன் ‘ஈஸ்வரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘கலகத்தலைவன்’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

NidhhiAgerwal

தமிழகத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. கடந்த வருடம் நம்ம ஊர் ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு ஒரு கோயிலையே கட்டியுள்ளனர். சமூக பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், ரசிகர்கள் மூலமாக ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

NidhhiAgerwal

அதேநேரம் அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. முதலில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிப்பதாக தகவல் வெளியானது. அவருடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வெளியான நிலையில் அதன்பிறகு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சமீபத்தில் சிம்புவுடன் லிவ்விங் டூ கெதரில் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. 

இந்நிலையில் மாடர்ன்  லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நிதி அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.  

Share this story