ஆரஞ்சு நிற உடையில் அசத்தும் நிவேதா பெத்துராஜ்... வைரல் புகைப்படங்கள் !

Nivetha

நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. 

Nivetha

தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். மாடலிங்கில் இருந்த ஆர்வம் காரணமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.  மதுரை பெண்ணான இவர், துபாயில் படித்து வளர்ந்தவர். கடந்த 2015 ஆம் ஆண்டில், மிஸ் இந்தியா யுஏஇ போட்டியில் பட்டம் வென்றுள்ளார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாத்துறைக்கு வந்த அவர், 'ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் கதாநாயகியான அறிமுகமானார். 

Nivetha

தமிழில், ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, திமிரு பிடிச்சவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேபோன்று தெலுங்கு படங்களான ‘சித்ரலஹரி’ மற்றும் ‘ப்ரோச்சேவரேவரா’ ஆகியவற்றில் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆலவைகுண்டபுறம்லோ மற்றும் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

Nivetha

நிவேதாவின் குறும்பு தனமும், சிறந்த நடிப்பும் ரசிகர்கள் கவர காரணமாக அமைகிறது. இந்நிலையில் கேஷுவல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தற்போது நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Nivetha

Share this story