நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி உண்மையா ?... மேலாளரின் விளக்கம் !

samantha

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதோடு அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த பதிவில்,  Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். 

samantha

மேலும் அந்த பதிவில் முழுவதும் குணமடைந்த பிறகு உங்களிடம் இந்த இதை பகிரலாம் என நினைத்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட சிறிது காலம் எடுக்கும் போல் தெரிகிறது. நாம் எப்பொழுதும் வலுவான விஷயங்களை மட்டுமே முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் உணர்கிறேன். இந்த பாதிப்பை சரி செய்ய நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்திருந்தார். 

இதையடுத்து இந்த நோயின் பாதிப்போடு சமீபத்தில் ‘யசோதா’ படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்றார். இந்நிலையில் திடீரென இன்று மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த சமந்தாவின் மேலாளர், ஐதராபாத்தில் உள்ள வீட்டில் சமந்தா ஓய்வெடுத்து வருவதாக தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு தெரிவித்திருக்கிறார். 

 

Share this story