மீண்டும் ஹாரர் படத்தில் சோனியா அகர்வால்... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு !

Sonia Aggarwal

நடிகை சோனியா அகர்வால் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமான நடிகையாக மாறியவர் நடிகை சோனியா அகர்வால். விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் ஒதுங்கியிருந்த அவர், சமீபத்தில் வெளியான 'கிராண்மா' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஹாரர் த்ரில்லரில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

Sonia Aggarwal

இந்த படத்தை அடுத்து மீண்டுமொரு ஹாரர் த்ரில்லர் படத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும், ஸ்மிருதி வெங்கட், அறிமுக நடிகர் ரோஷன், இசைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 

Sonia Aggarwal

இந்நிலையில் இப்படத்தின் தொடக்கவிழா இன்று பூஜையுடன் இன்று நடைபெற்றது. இதில் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வித்தியாசமான ஹாரர் த்ரில்லரில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறவுள்ளது. 

Share this story