க்யூட் லுக்கில் திரிஷா.. வைரலாகும் புகைப்படங்கள் !

trisha

 நடிகை திரிஷாவின் க்யூட் லுக் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

trisha

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் உச்ச நடிகையாக இருப்பது சிலர் மட்டுமே. அதில் மிகவும் முக்கியமானவர் நடிகை திரிஷா. துணை நடிகையாக அறிமுகமான அவர், அமீரின் 'மெளனம்‌ பேசியதே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

trisha

அவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, ஆறு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டடித்தவை. தமிழை தாண்டி தெலுங்கு கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த '96' திரைப்படம் மரண மாஸ் ஹிட்டடித்தது. சமீபத்தில் வெளியான மணிரத்தினத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் அழகு பதுமையாக தோன்றியிருந்தார். 

trisha

தற்போது பொன்னியின் செல்வன் 2, சதுரங்க வேட்டை 2, ராம், தி ரோட் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேபோன்று அவரது நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை திரிஷா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story