வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை அபிநயா...!

abinya

நடிகை அபிநயா தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

‘நாடோடிகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அபிநயா. இவர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். abi

கடைசியாக மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் வெளியான ‘பனி’ படத்தில் நடித்திருந்தார். இதில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 9ஆம் தேதி திருமண நிச்சயம் நடந்து முடிந்தது. இதனை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தெரிவித்த அவர் வருங்கால கணவர் குறித்த விவரங்களையும் அவர் முகத்தையும் வெளியிடவில்லை. 

 


இதனைத் தொடர்ந்து தற்போது வருங்கால கணவரின் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் திருமணம் குறித்த விவரங்களை அவர் பகிரவில்லை. இருப்பினும் அபிநயாவிற்கு இப்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story

News Hub