கருப்பு சேலையில் சுண்டியிழுக்கும் ஐஸ்வர்யா தத்தா.. வைராகும் புகைப்படங்கள் !

AishwaryaDutta

 கருப்பு நிற சேலையில் அசத்தலான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ளார். 

AishwaryaDutta

மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா தத்தா. கொல்கத்தாவை சேர்ந்த அவர், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, காஃபி வித் காதல், ஜாஸ்பர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

AishwaryaDutta

மகத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் Condition apply’, யோகிபாபு மற்றும் ஜூனியர் எம்.ஜி.ஆர் இணைந்து நடித்துள்ள  ‘இரும்பன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது கெட்டவனு பேர் எடுத்த நல்லவன் டா, அலேகா, கன்னித்தீவு, பப்ஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

AishwaryaDutta

இதற்கிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 2-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஆனால் எதிர்பார்த்தப்படி அவர் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் விதவிதமான போட்டோஷூட்டுகளை மட்டும் எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் ஜிகுஜிகு மின்னும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Share this story