பூங்குழலியின் அசர வைக்கும் போட்டோஷூட்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

Aishwarya lekshmi

பொன்னியின் செல்வன் நடிகையின் அசர வைக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

Aishwarya lekshmi

 மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் விஷாலின் ஆக்‌ஷன் மற்றும் தனுஷின் ஜகமே தந்திரன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

Aishwarya lekshmi

இந்த இரண்டு படங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கேரக்டரில் அழகாக நடித்திருந்தார். இந்த கேரக்டர் ரசிகர்களிடையே பேசப்படும் கேரக்டராக அமைந்தது. இதையடுத்து விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் தற்போது நடித்து வருகிறார். மலையாளத்தில் மாய நதி, வரதன்,பிரதர்ஸ் டே உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

Aishwarya lekshmi

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிளாமரில் கொள்ளை அழகில் இருக்கும் புகைப்படங்களை ஐஸ்வர்ய லட்சுமி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Aishwarya lekshmi

Share this story