ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்திருப்பேன் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !

aiswarya rajesh
எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நான் நன்றாகவே பொருந்தியிருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

 தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் அவர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அவர், தற்போது ‘ஃபர்ஹானா’ படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

aiswarya rajesh

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர், எனக்கு தெலுங்கு சினிமாவை மிகவும் பிடிக்கும். நான் கம்பேக் கொடுக்க எனக்கு ஒரு நல்ல படம் அமையவேண்டும். அதற்கான நான் காத்திருக்கிறேன். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தெலுங்கில் நான் ‘வேல்ட்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தில் நடித்திருந்தேன். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஒருவேளை மீண்டும் தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றார்.

மேலும் பேசிய அவர், சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனது வாய்ப்பு கிடைத்திருந்தால் அந்த கதாபாத்திரம் தனக்கு நன்றாகவே பொருந்திருக்கும் என்று கூறினார். 

 

 

Share this story