நடிகை ராஷ்மிகாவை நான் குறைக்கூறினேனா ? - இணையத்தள சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் !

AiswaryaRajesh

ராஷ்மிகா மந்தனாவை குறைக்கூறியதாக வெளியான தகவலுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த அவர், ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனது வாய்ப்பு கிடைத்திருந்தால் அந்த கதாபாத்திரம் தனக்கு நன்றாகவே பொருந்திருக்கும் என்று கூறியிருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த கருத்து இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் நான் கூறிய விஷயம் தவறுதலாக புரிந்துக்கொள்ளப்பட்டது என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் ஒரு நேர்காணலின் போது என்னிடம் தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான இடங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கியில் எனக்கு தெலுங்கு திரளுகும் மிகவும் பிடிக்கும் எனக்கு விருப்பமான பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன் உதாரணத்திற்கு புஷ்பா இருவரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதில் அளித்தேன். 

ais

இருப்பினும் இருப்பினும் தூரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ரஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும் திரையுலகை சார்ந்த சக நடிகர், நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.‌

Share this story