ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகரின் தந்தை... படக்குழு அறிவிப்பு
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கான திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆசிரியையாக ஐஸ்வர்யா ராஜேஷும், காவல்துறை விசாரணை அதிகாரியாக அர்ஜூனும் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படத்தை ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த மாதம் படப்பூஜை போடப்பட்ட இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதோடு நடிகர் கதிரின் தந்தை லோகுவும் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

