அடுத்தடுத்து இந்தியில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. புதிய படம் குறித்து முக்கிய அப்டேட்

aiswarya rajesh

 ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய பாலிவுட் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அவர், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, பர்ஹானா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

aiswarya rajesh

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை  சாம்ராஜ் சக்கரவர்த்தி என்பவர் இயக்கவுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘மாணிக்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளளது. இந்த படத்தில் விவேக் பிரசன்னா, சம்யுக்தா சண்முகநாதன், சாய் ஜனனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் தொடங்கவிழா இன்று நடைபெற்றது. இதையடுத்து இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story