அருவியில் ஆனந்த குளியல் போட்ட அமலா பால்... வைரலாகும் பிகினி வீடியோ !

அருவி ஒன்றில் நடிகை அமலா பால் ஆனந்த குளியல் போடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். ஆரம்பத்தில் கிளாமர் காட்டாமல் நடிக்க தொடங்கினார். இதனால் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார். ‘மைனா’ படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானார்.
அதன்பிறகு வேட்டை, தெய்வ திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறுகிய காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இந்த திருமண பந்தம் கொஞ்ச நாட்கள் கூட நீடிக்கவில்லை. பின்னர் ‘ஆடை’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஒட்டு துணிக்கூட இல்லாமல் நடித்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இதையடுத்து திரைப்பட வாய்ப்பு குறைந்தது.
சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ள அமலா பால், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது உச்சக்கட்ட கிளாமரில் அருவி ஒன்றில் பிகினி உடையில் ஆனந்த குளியல் போடும் வீடியோவை அமலா பால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.