வெட்கத்தில் ஜொலிக்கும் அமலா பால் - அசத்தலாக நடந்த வளைகாப்பு

tn

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  பின்னர்  நான்கு ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டார். இருப்பினும் இயக்குனர் விஜய் மறுமணம் செய்துகொண்டார். ஆனால்  தொடர்ந்து தெலுங்கு, இந்தி ,மலையாளம், தமிழ் என திரைப்படங்களில் கவனம் செலுத்தினார் அமலாபால். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜெகத் தேசாய்  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  கடந்த நவம்பர் மாதம் கொச்சியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

tn

திருமணம் முடிந்த சில மாதத்தில் நடிகை அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டால் பக்கத்தில் அறிவித்தார்.  கர்ப்பமாக இருந்த போதிலும் ஆடு ஜீவிதம் படத்திற்காக அவர் தொடர்ந்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளையும் கலந்து கொண்டு வந்தார்.

tn

 இந்நிலையில் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இதற்கான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

Share this story