மீண்டும் தாயாகும் நடிகை எமி ஜாக்சன்...!

amy

லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்சன். தன்னுடைய 17 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து பின்னர் அழகி போட்டியிலும் கலந்து கொண்டவர். மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்து கொண்ட எமி ஜாக்சன், இரண்டாவது இடம் பிடித்தார். இதனிடையே இயக்குனர் ஏ.எல்.விஜய், தான் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தில் நடிக்க வைக்க வெளிநாட்டு பெண் ஒருவரை தேடிக் கொண்டிருந்த நிலையில், எமி ஜாக்சன் பற்றி தெரிந்ததும், பின்னர் இவரையே அந்த 'துரையம்மா' கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழில், 'தாண்டவம்', 'ஐ', 'கெத்து' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் வெளியானது. இதற்கிடையே, எமி ஜாக்சனுக்கு திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. 2015-ம் ஆண்டு முதல் ஜார்ஜ் என்பவருடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த எமி ஜாக்சன், குழந்தை பிறந்த பின்னர் 2021-ம் ஆண்டு ஜார்ஜை விட்டு பிரிந்தார்.

அதனை தொடர்ந்த கடந்த 2 ஆண்டுகளாக எட் வெஸ்ட்விக் என்கிற ஹாலிவுட் டிவி நடிகருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன், கடந்த ஆகஸ்ட் மாதம் 9- ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடந்தது. இந்த நிலையில், தற்போது எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலை இரண்டாவது கணவர் எட் வெஸ்ட்விக்குடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

Share this story