இசைநிகழ்ச்சியில் ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கிய நடிகை ஆண்ட்ரியா

இசைநிகழ்ச்சியில் ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கிய நடிகை ஆண்ட்ரியா

தமிழில் முன்னணி பாடகியாக இருப்பவர் ஆண்ட்ரியா. தனது இனிமையான குரலால் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். பன்முக திறமைக்கொண்ட இவர், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.  ஏற்கனவே மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதில் வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருகிறார். 

null

இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டு பாடினார். அதையடுத்து அவர் புறப்படும்போது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டு அனுப்பிவைத்தனர். 

Share this story