கடலில் காற்று வாங்கும் ஆண்ட்ரியா... லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள் !

andrea jeremiah

 கடலில் படகு ஒன்றில் ஒய்யாரமாக செல்லும் புகைப்படங்களை நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். 

andrea_jeremiah

தனது இனிமையான குரலால் மட்டுமல்ல, நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பாடகியாக தான் ஆண்ட்ரியா அறிமுகமானார். அதன்பிறகு தற்போது நடிகையாக வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார். அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

andrea_jeremiah

குறிப்பாக ‘வட சென்னை’ படத்தில் அந்த ஏரியாவில் பெண்ணாகவே மாறி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள அவர், தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வட்டம், நோ என்ட்ரி உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

andrea_jeremiah

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, வெளிநாட்டில் தற்போது சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரை ஒன்றில் வேகமாக படகு ஒன்றில் பயணம் செய்யும் அழகிய புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. 

Share this story