மோசமாக தாக்கிய முன்னாள் காதலன்... நடிகை அனிகா விக்ரமன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சி !

anicka vikhraman

 முன்னாள் காதலன் தாக்கியதால் முகம் வீங்கிய புகைப்படத்தை நடிகை அனிகா விக்ரமன் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் நடித்து வருபவர் நடிகை அனிகா விக்ரமன். இளம் நடிகையாக வலம் வரும் அவர், தமிழில் ‘க்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு விஷமக்காரன், எங்க பாட்டன் பாத்தியா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். 

anicka vikhraman

இந்நிலையில் உடல் முழுவதும் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை அனிகா விக்ரமன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், நான் அனூப் பிள்ளை என்பவரை காலித்து வந்தேன். கடந்த சில வருடங்களாக அவர் என்னை மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தி வருகிறார். இப்படிப்பட்ட மோசமான மனிதரை பார்த்ததே இல்லை என்றும், என்னை இப்படி செய்வார் என்று கனவிலும் நினைத்தது இல்லை என்று கூறினார். 

anicka vikhraman

மேலும்  சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை மோசமாக தாக்கினார். அதன்பிறகு காலில் விழுந்து அழுததால் அவரை மன்னித்தேன். பின்னர் மீண்டும் பெங்களூருவில் தாக்கியதால் போலீசில் புகார் அளித்தேன். ஆனாலும் அவர் வெளியே வந்து என்னை சித்ரவதை செய்தார். கடந்த சில ஆண்டுகளாக அனூப் பிள்ளையால் பல தாக்கப்பட்டுள்ளேன். நான் அவரை விட்டு விலக முடிவு செய்தாலும், என்னை விட்டு விலகாமல் டார்ச்சர் செய்து வருகிறார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் அனூப், எனது குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார். நான் அனுபவித்த வேதனைகளுக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

Share this story