எல்லை மீறும் நடிகை அனிகா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !
நடிகை அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன், தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன், கடந்த 2010-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கதா துடருன்னு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து மலையாளத்தில் 5 சுந்தரிகள், நீலாகாஷம், பச்சக்கடல் சுவன்ன பூமி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித் மகளாக நடித்து பிரபலமானார். ரீல் மகளாக நடித்த அவரை அஜித்தின் ரியல் மகளாகவே ரசிகர்கள் நினைத்தனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘குயின்’ படத்தில் இளம் ஜெயலலிதாவாக நடித்து அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உச்சபட்ச கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை அனிகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு கவர்ச்சி தேவையா என வறுத்தெடுத்து வருகின்றனர்.


