அல்ட்ரா மாடலாக மாறியுள்ள அனிகா சுரேந்திரன்.. வைரல் புகைப்படங்கள் !

AnikhaSurendran

 நடிகை அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

AnikhaSurendran

தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன், தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன், கடந்த 2010-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கதா துடருன்னு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  

AnikhaSurendran

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து மலையாளத்தில் 5 சுந்தரிகள், நீலாகாஷம், பச்சக்கடல் சுவன்ன பூமி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித் மகளாக நடித்து பிரபலமானார். ரீல் மகளாக நடித்த அவரை அஜித்தின் ரியல் மகளாகவே ரசிகர்கள் நினைத்தனர்.  

AnikhaSurendran

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘குயின்’ படத்தில் இளம் ஜெயலலிதாவாக நடித்து அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அனிகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story