பார்ட்டி மோடில் குட்டி நயன்தாரா.. கொஞ்சம் ஓவராதான் போறீங்க

AnikhaSurendran

பார்ட்டி மோடில் இருக்கும் புகைப்படங்களை நடிகை அனிகா வெளியிட்டுள்ளார். 

AnikhaSurendran

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிகா சுரேந்திரன். முன்னணி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 

AnikhaSurendran

அதன்பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அஜித்தின் ரீல் மகளாக இருக்கும் அவரை நிஜ மகளாகவே ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். 

AnikhaSurendran

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘புட்ட பொம்மா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இந்த படத்தையடுத்து ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில் லிப்டாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் அனிகா நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை நட்சத்திரமாக அழகான நடிப்பை வெளிப்படுத்திய அனிகா, இப்படி நடிக்கலாமா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

AnikhaSurendran

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, அனிகாவிற்கு நெருக்கடியை உண்டாக்கியது. இருந்தப்போதிலும் தொடர்ந்து கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பார்ட்டி மோடில் இருக்கும் புகைப்படங்களை அனிகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. வேற லெவலில் போறீங்கன்னு மறைமுகமாக ஒருபுறம் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.  

Share this story