தவறான ரிலேஷன்ஷிப்பால் கெரியரை இழந்தேன் - பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அஞ்சலி !

anjali

தவறான நபருடன் ஏற்பட்ட உறவால் எனது வாழ்க்கையை இழந்தேன் என்று நடிகை அஞ்சலி வேதனை தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சலி. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு அங்காடித் தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இதற்கிடையே ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் நடிகர் ஜெய்யுடன் அஞ்சலிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் ஆகிய படங்களில் இணைந்து இருவரும் நடித்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாகவும், லிவ்விங் உறவில் இருந்ததாகவும் தகவல் வெளியானது.

anjali

சில ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்ததாக தகவல் கசிந்தன. இதனால் திரைப்பட வாய்ப்புகளை அஞ்சலி தவிர்த்து வந்தார். இந்நிலையில் நடிகை அஞ்சலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு நபருடன் ஏற்பட்ட உறவு தன்னுடைய வாழ்க்கையை கவனிக்க முடியாமல் போனது. அந்த உறவு மிகவும் தவறான உறவு என அஞ்சலி தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், தன்னுடைய வாழ்க்கைக்கு தடையாக இருந்த உறவை விட, வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்று அஞ்சலி கூறினார். அஞ்சலியின் இந்த பேச்சு தற்போது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

Share this story