காதலில் விழுந்தாரா அஞ்சு குரியன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

AnjuKurian

நடிகை அஞ்சு குரியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

AnjuKurian

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சு குரியன். தனது க்யூட் அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள அவர், தமிழில் ‘சென்னை டு சிங்கப்பூர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து  ‘ஜுலை காற்றில்’, ‘இக்ளூ’, 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். 

AnjuKurian

இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திலும் நடித்தார். தற்போது ஆரி, பிரபுதேவாவின் ‘உல்ஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழை தவிர மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 

AnjuKurian

தமிழில் சினிமா வாய்ப்பை பிடிக்க தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை அஞ்சு குரியன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அது என்ன சேதி என்றால் அவர் வெளியிட்டுள்ள ஒரு படத்தில் ‘லவ்’ என்று காட்டியுள்ளார். இதனால் அவர் யாரைவது காதலிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this story