மயக்கிறயே.. கலக்குறயே... அனுபமாவின் லேட்டஸ்ட் க்ளிக் !

Anupama

மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் புடவையில் ஸ்டைலிஷ்ஷாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  ‌

Anupama

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். முன்னணி நடிகை வலம் அவர், மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.  ‌‘பிரேமம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானவர்.  முதல் படமே அவருக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்தது.  இதனால் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Anupama

தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கொடி’ படத்திலும், அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிகிறது. சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த ‘பட்டர்ஃப்ளை’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Anupama

அதே சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா 2’, ‘18 பேஜஸ்’ ஆகிய திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் புடவையில் ஸ்டைலிஷ்ஷாக இருக்கும் புகைப்படங்களை நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.  ‌ 

Share this story