சமந்தாவை தொடர்ந்து 'பாகுபலி' நடிகைக்கும் அரிய வகை நோய் ?... அதிர்ச்சியில் திரையுலகம் !

anushka shetty

சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகைக்கும் அரிய வகை நோய் இருப்பதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 நடிகை அனுஷ்கா ஷெட்டி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். 'பாகுபலி' படத்தின் மூலம் உலகம் முழுவதும் பல ரசிகர்களைச் சம்பாதித்தார் அனுஷ்கா. இடைப்பட்ட காலத்தில் அவர் படங்களில் நடிப்பது குறைந்து போனது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியைத் தழுவின. 

anushka shetty

41 வயதாகும் நடிகை அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதையடுத்து தற்போது மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நவீன் பாலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் அனிஷ்காவின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில நடிகை அனுஷ்கா அரிய வகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.‌ இது குறித்து சமீபத்தில் பேசிய அவர், ஏதேனும் ஒரு சமயங்களில் மிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் சிரிப்பேன்.  அப்படி நான் சிரித்தால் அதனை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன். இதனால் படப்பிடிப்பையே நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்தார். ஏற்கனவே நடிகை சமந்தா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Share this story