மீண்டும் இஞ்சி இடுப்பழகியான அனுஷ்கா... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் !

Anushka Shetty

நடிகை அனுஷ்காவின் தற்போதைய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தென்னிந்திய சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தன் நடிப்புத் திறமையால் பெண்கள் மையமாக வைத்து எடுக்கப்படும் யாவிலும் அனுஷ்காவே நிறைந்திருப்பார்.

Anushka Shetty

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் தன் நடிப்பை விதைத்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார். 'பாகுபலி' படத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதாக பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. 41 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. 

இதற்கிடையே 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கூட்டியிருந்தார். அதன்பிறகு அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் பட வாய்ப்புகள் கை நழுவி சென்றது. இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் மிகவும் குண்டான தோற்றத்தில் அனுஷ்கா காணப்படுகிறார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story