‘என்னை சுற்றி நல்ல ஆண்கள் இல்லை!....’- மனம் திறந்த நடிகை ‘அனுயா’.

photo

‘சிவா மனசுல சக்தி’ படத்தில் நடித்து பிரபலமான நடிகை அனுயா திருமணம் குறித்த கேள்விக்கு நச் பதில் கொடுத்து, தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

photo

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் நடித்து சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்த நடிகை அனுயா, ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை தொடந்து மதுரை சம்பவம், நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷங்கரின் ‘நண்பன்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து நல்ல ரீச் அடைந்தார். இவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த நடிகை அனுயா திருமணம் குறித்த கேள்விக்கு நச் பதில் கொடுத்துள்ளார்.

photo

அதாவது துபாயில் படித்து முடித்தவுடன் சினிமாவுக்குள் வந்துவிட்டேன். எனக்கு  தமிழ் தெரியாததால், நான் ஆரம்பத்தில் நடித்த ஜீவா, சுந்தர் சி, விஜய் ஆண்டனி  ஆகியோருடன் உறவில் இருந்ததாக செய்திகள் வெளியானது. அது எனக்கு வேதனையை தந்தது. அவை அனைத்துமே தவறானது, மேலும் திருமணம் குறித்து பேசிய அவர் என்னை சுற்றி நல்ல ஆண்களே இல்லை. என கூறியுள்ளார்.இந்த பதிவு வைரலாகிறது.

Share this story