கணவருடன் விவாகரத்தா ?... நக்கலாக பதிலடி கொடுத்த நடிகை அசின் !

asin

 கணவருடன் விவாகரத்தாக உள்ளதாக வெளியான தகவலுக்கு நடிகை அசின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகை அசின். கமலஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். சினிமாவில் மார்க்கெட் குறைந்ததால் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

asin

இந்நிலையில் தனது கணவரை நடிகை அசீன் விவாகரத்து செய்யவுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும், வதந்தியே என்று நடிகை அசீன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோடை விடுமுறையில் அருகருகே அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். மிகவும் கற்பனையான, எந்த விதமான ஆதாரமும் இல்லாத செய்தி ஒன்றை பார்த்தோம். எங்கள் வீட்டில் திருமணம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது பிரிந்துவிட்டதாக செய்தி வந்தது இப்போது நினைவு வந்ததது. இதை விட்டுவிட்டு வேறு ஏதாவது சிறப்பான விஷயத்தை செய்யுங்கள். இதனால் எங்களது மகிழ்ச்சியில் 5 நிமிடம் வீணடிக்கப்பட்டு விட்டது என்று நக்கலாக கூறியுள்ளார். 

 

 


 

Share this story