நடிகர் பாலாவின் உடல்நிலை எப்படியிருக்கு ?... அவரது மனைவி கொடுத்த விளக்கம் !

bala

நடிகர் பாலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் பாலா. தமிழில் அஜித்தின் ‘வீரம்’ படத்தில் மூன்று தம்பிகளில் ஒருவராக வந்து ரசிகர்களிடையே பிரபலமானவர். காதல் கிசுகிசு, அன்பு உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். 

bala

சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த பாலா,  உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் பாலா அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு கல்லீரல் பாதிப்பால் சிரோசிஸ் என்ற வியாதி இருப்பது தெரிய வந்துள்ளது. 

இதற்கிடையே நடிகர் பாலாவின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலாவின் உடல்நலம் குறித்து அவரது மனைவி எலிசபெத் விளக்கமளித்துள்ளார். அதில், தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார். இது தேவையில்லாத வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Share this story