துளி துளி துளி மழையாய் வந்தாளே... பவானி ஸ்ரீயின் அசத்தல் போட்டோஷூட்!
நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ தற்போது தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் பாவக் கதைகள் அந்தாலஜி படத்தின் தங்கம் என்ற பகுதியின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றார். அந்தப் படத்தில் பவானி ஸ்ரீ-க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் இயக்கி நடிக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தில் பவானி ஸ்ரீ முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தவிர வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது பவானி ஸ்ரீ முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் மழையில் குடை பிடித்தவாறு பாஸ் கொடுத்துள்ள பவானியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.




