குறையாத அழகில் பிந்து மாதவி... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

BinduMadhavi

நடிகை பிந்து மாதவி கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

BinduMadhavi

அழகு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. எளிமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றார். முதன்முதலில் கவர்ச்சி காட்டாமல் திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில்  ‘பொக்கிஷம்’  என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

BinduMadhavi

அதன்பிறகு கே.டி.பில்லா கிலாடி ரங்கா, கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதன்பிறகு படவாய்ப்பு குறைந்ததால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றார்.

BinduMadhavi

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடித்து வரும் பிந்து மாதவி,  ’யாருக்கும் அஞ்சேல்’ ‘மாயன்’, ’பகைவனுக்கு அருள்வாய்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கு பிக்பாஸில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னராக தேர்வானார். இந்நிலையில் ஹோம்லி லுக்கில் மட்டுமே நடித்து வந்த பிந்து மாதவி, வாய்ப்பு இல்லாததால் தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறியுள்ளார். அதனால் தான் அடுத்தடுத்து கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

Share this story