ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் பிந்து மாதவி... அசர வைக்கும் புகைப்படங்கள் !

ஸ்டைலான லுக்கில் இருக்கும் நடிகை பிந்து மாதவியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தனது கண் அழகால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிந்து மாதவி. தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் அவர், ‘பொக்கிஷம்’ படத்தின் மூலம் முதன்முதலில் தமிழில் நடிகையான அறிமுகமானார். முதல் படம் வரவேற்பை பெறாத நிலையில் 'கழுகு' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பிறகு கே.டி.பில்லா கில்லாடி ரங்கா, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாததால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி பிக்பாஸிலும் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கில் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹோம்லியான லுக், அழகான கண்கள் என ரசிகர்களை தனது கொள்ளை அழகால் கவர்ந்து வைத்துள்ளார். இதற்கிடையே சினிமா வாய்ப்பு குறைந்ததை அடுத்து கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பிந்து மாதவி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.