கண்டாங்கி சேலையில் கிராமத்து பெண்ணாக தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படம் !

darsha kupta

 நடிகை தர்ஷா குப்தாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

darsha kupta

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘முள்ளும் மலரும்” என்ற சீரியலில் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் கிடைத்த பிரபலத்தையடுத்து சினிமாவிலும் நடித்து வருகிறார். 

darsha kupta

மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தர்ஷாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இதற்கிடையே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

darsha kupta

தற்போது புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் தர்ஷா, இயக்குனர்களை கவர கவர்ச்சி போட்டோஷூட்டுகளை எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கண்டாங்கி சேலையில் கிராமத்து லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story